Friday 5 July 2019

ஐந்து பெரிது, ஆறு சிறிது...

“சீ மிருகமே!”
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே
எந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை
எங்கேனும்
தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டா ?
**  


எந்த விலங்குக்கும்
சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?
**

இன்னொன்று :
பறவைக்கு வேர்ப்பதில்லை
**

எந்த பறவையும்
கூடுகட்டி
வாடகைக்கு விடுவதில்லை
**

எந்த விலங்கும்
தேவையற்ற நிலம்
திருடுவதில்லை
**

கவனி மனிதனே
கூட்டு வாழ்க்கை இன்னும்
குலையாதிருப்பது
காட்டுக்குள்தான்
**

அறிந்தால்
ஆச்சரியம் கொள்வாய்
உடம்பை உடம்புக்குள் புதைக்கும்
தொழு நோய்
விலங்குகளுக்கில்லை
**

மனிதா
இதை
மனங்கொள்
கர்ப்பவாசனை
கண்டு கொண்டால்
காளை பசுவைச்
சேர்வதில்லை
**

ஒருவனுக்கொருத்தி
உனக்கு வார்த்தை
புறாவுக்கு வாழ்க்கை
எந்த புறாவும்
தன் ஜோடியன்றி
பிறஜோடி தொடுவதில்லை
**

பூகம்பம் வருகுது எனில்
அலைபாயும் விலங்குகள்
அடிவயிற்றில் சிறகடிக்கும்
பறவைகள்
இப்போது சொல்
அறிவில்
ஆறு பெரிதா ?
ஐந்து பெரிதா ?
**

மரணம் நிஜம்
மரணம் வாழ்வின் பரிசு
மாண்டால் -
மானின் தோல் ஆசனம்
மயிலின் தோஅகை விசிறி
யானையின் பல் அலங்காரம்
ஒட்டகத்தின் எலும்பு ஆபாரணம்
**

நீ மாண்டால் …
சிலரை
நெருப்பே நிராகரிக்கும்
என்பதால்தானே
புதைக்கவே பழகினோம்
**

“சீ மிருகமே !”
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே
**

கொஞ்சம் பொறு
காட்டுக்குள் என்ன சத்தம் …
ஏதோ ஒரு மிருகம்
இன்னொரு மிருகத்தை
ஏசுகிறது
” சீ மனிதனே !”
**
                      -கவிஞர் வைரமுத்து

Wednesday 14 March 2018

ஸ்டீபன் ஹாக்கிங்

         உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங், 76-வது வயதில் இன்று (14.03.2018) காலமானார்.


"வாழ்க்கை கடினம்தான். ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது!" - ஸ்டீபன் ஹாக்கிங்
ஸ்டீபன் ஹாக்கிங்


           யற்பியல் உலகம் போற்றும் தன்னிகரற்ற நம்பிக்கை நாயகன் ஸ்டீபன் ஹாக்கிங், மேல் வரிசையில் பற்கள் கிடையாது. கீழிருக்கும் சில பற்கள் மேல் உதட்டை அழுத்தி வெளிவந்து நிற்கும். தலை, வலது பக்கம் சாய்ந்திருக்கும். நெற்றியை அதிகம் மறைக்காத மயிர். கேமராவும் சென்சாரும் பொருத்தப்பட்ட கண்ணாடி. கம்ப்யூட்டர் இணைக்கப்பட்ட வீல் சேர். மிகக் குறைவான எடைகொண்ட பொட்டலமாய், சுருண்டு உட்கார்ந்திருக்கும் அந்த உருவம். கன்னத்தில் சில தசைகள் தவிர உடலின் அத்தனை பாகங்களும் செயலிழந்துபோய்விட்டன. எந்தவொரு மனிதனும் வாழவே முடியாத சூழல். ஆனால், அளப்பறிய சாதனைகளோடு சரித்திரம் படைத்துவரும் ஓர் அதி அற்புதன். இவ்வளவு வலிகளையும் கடந்து அவர் சிரிப்பார். எலும்போடு ஒட்டியிருக்கும் அவரின் கன்னத் தசைகள் சிறிய அசைவைக் கொடுக்கும். அது அத்தனை அழகாய் இருக்கும். உலக அண்டவியல் ஆராய்ச்சியின் அறிவு - அழகன் ஸ்டீபன் ஹாக்கிங்...


து, இரண்டாம் உலகப் போர் சமயம். மருத்துவம் படிக்கும் பிராங்கும், தத்துவம் படிக்கும் இசோபெல்லும் காதல் வயப்படுகிறார்கள். கல்யாணம் செய்துகொள்கிறார்கள். எங்கும் போர். பீரங்கிகள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகளின் சத்தங்களுக்கு மத்தியில், அந்தக் குழந்தையின் அழுகுரல் அத்தனை இன்பமானதாய் அவர்களுக்கு இருக்கிறது. கருவறை கடந்து பூமியை எட்டிப்பார்த்த அந்தக் குழந்தை, எதிர்காலத்தில் அண்டம் கடக்கும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என்ற எண்ணம் துளியளவும் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. அது 1942 -ம் ஆண்டு, ஜனவரி 8 -ம் தேதி. கலீலியோ பிறந்து சரியாக 300 ஆண்டுகள் ஆகியிருந்தது அப்போது.



ஸ்டீபன் ஹாக்கிங் வளரத் தொடங்குகிறார்.  இவரை இவரது சக நண்பர்கள் பள்ளியில் ஐன்ஸ்டின் என்று அழைத்து வந்தார்கள். இவர் அப்போது எதையும் புரிந்து கொள்ள முடியாத முட்டாளாக இருந்தார். ஐன்ஸ்டின் அவருடைய சிறுவயதில் அப்படித்தான் இருந்தார். அதன் காரணமாகவே அப்படி அழைத்தார்கள். இருவருமே வளர்ந்த பின் அறிவியலை மாற்றியது வரலாறு.. ஆனால், ஏன்? எப்படி? என்ற கேள்விகள் எதைப் பார்த்தாலும், எப்பொழுதும் அவனுள் எழுந்துகொண்டேயிருந்தது. அதற்கான விடைகளைத் தொடர்ந்து தேடத் தொடங்குகிறான். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த உலகம் எப்படித் தோன்றியது என்ற பெரும் கேள்வி அவனுள் கனன்றுகொண்டே இருந்தது. 

1960 -களில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். அந்தச் சமயம் ALS எனப்படும் Amyotrophic Lateral Sclerosis என்ற குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டார். கொஞ்சம் கொஞ்சமாக அவரின் உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின.இவர் இரண்டு வருடத்தில் இறந்து விடுவார் என்று 23 வயதை கடைசி வருடமாக டாக்டர்கள் குறித்தார்கள். ஆனால் அப்போதும் கூட மனம் தளராமல், இவர் கேம்பிரிட்ஜில் டாக்டர் பட்டம் படிக்க சென்றார். அந்த தன்னம்பிக்கைதான் இவரது வாழ்க்கையை மாற்றியது. செயலிழக்கும் உறுப்புகளுக்கு ஈடான கருவிகளைத் தானே உருவாக்கி, அதை ஈடுசெய்து வந்தார். ஒரு கட்டத்தில், பெரும்பாலான உறுப்புகள் செயலிழந்துவிட்ட நிலையில், 'ஈக்வலைஸர்' என்ற கம்ப்யூட்டர் புரோக்ராம் உதவியோடு....  இவருக்காக ''ஸ்பீச் டிரான்ஸ்லேட்டர்'' தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டது. இவர் கண்களில் ஏற்படும் அசைவுகள் வார்த்தைகளாக மாற்றப்பட்டது. கன்னத் தசைகளின் அசைவுகள்மூலம், கம்ப்யூட்டர் குரலில் பேசி, அதை வைத்து இவர் செய்த சாதனைகள் பல. பேட்டிகள் கொடுத்தார், புத்தகம் எழுதினார், நாடகத்தில் நடித்தார், மொத்த அறிவியல் உலகையே கட்டுக்குள் வைத்து இருந்தார்.

ஸ்டீபன் ஹாக்கிங்

இது, இவரின் அறிமுகம். இவரின் அடையாளங்கள் அண்டவியல் ஆராய்ச்சிகள்தாம். டைம் மெஷின் (Time Machine), பிளாக் ஹோல் (Black Hole), ஏலியன் (Alien), பிக்பேங் தியரி (Bigbang Theory) என அண்ட அறிவியலின் பல மைல்கல் ஆராய்ச்சிகளை மேற்கொள்பவர். இமேஜினரி டைம் (Imaginary Time) என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இவர் எழுதிய "எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்" ( A Brief Histroy of Time) என்ற புத்தகம், தமிழ் உட்பட 35 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தி யுனிவர்ஸ் இன்  எ  நட் ஷெல் (The Universe in a nut shell), மை ப்ரீஃப் ஹிஸ்டரி (My Brief History) உட்பட பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். ஹாலிவுட்டின் பல படங்கள், இவரின் கோட்பாடுகளைத் தழுவியே எடுக்கப்படுகின்றன.


கல்லூரி காலத்தில் தன்னுடன் படித்த தோழி, ஜேன் வைல்டை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். 30 வருடங்கள் இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். பின்னர், தன்னை கவனித்துக்கொண்ட செவிலியர் எலைனுடன் காதல்கொண்டு, அவரைத் திருமணம் செய்துகொண்டு, பத்தாண்டுகள் அவரோடு வாழ்ந்தார். உடல் இச்சைகள் கடந்த அழகான காதலாக அந்தக் காதல் இருந்தது.


திதீவிர இடதுசாரி சிந்தனைகொண்டவர். பாலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளை எதிர்த்து, இஸ்ரேலில் பங்கேற்கவேண்டிய மிக முக்கிய அறிவியல் கூட்டத்தைப் புறக்கணித்தார். வியட்நாம் மீதான போர், இராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு எனத் தன் வீல்சேரில் பயணித்தபடியே எளிய மனிதர்களின் குரலுக்காக, குரலே இல்லாத நிலையிலும் குரல்கொடுத்தார். 
ஏலியன், வேற்று கிரகம் என 75 வயதாகியும் தொடர்ந்து இயங்கி வந்த ஸ்டீபன், மனித சமுதாயத்திற்கு மிக முக்கிய எச்சரிக்கை மணியை அடிக்கிறார்...

மிகவும் சிறந்தவர்
இவரது ஆராய்ச்சிகள், கருத்துக்களை பார்த்த உலக விஞ்ஞானிகள் இவரை சுற்றி சுற்றி வந்தார்கள். இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலாளர் ஹாக்கிங் என்பதில் சந்தேகமே இல்லை.



நாம் வேடிக்கையானவர்களாக இல்லாவிடில் 
வாழ்க்கை நரகமாகிவிடும்
                                                                       -ஸ்டீபன் ஹாக்கிங்


Wednesday 18 February 2015

நாகரிக வளர்ச்சி???



அன்று: 
உடையின் இடையே இடையை 
தேடவேண்டியிருந்தது

இன்று: 

இடையின் நடுவே உடையை 
தேடவேண்டியிருக்கிறது.

                             -படித்ததில் பிடித்தது

சுதந்திரம்


மேடையிலொருவன் பொய்குரைப்பான்
தாவி மேடையேறித்
தலையிற்குட்ட முடியவில்லை



சூரிய நிலாக்களாய்க்
கண்ணுக்கழகிய பெண்கள்
கடந்தேகும் போதெல்லாம்
அழகி நீங்களென
வாயாரச் சொல்ல வலிமையில்லை



தண்ணீரே எண்ணெயாய்த்
தாமரைகள் விளக்கெரிக்கும்
குளம்கண்டால்
ஓருடையும் களையாமல் ஓடிக்குதித்து
நீர் குடைந்தாட நேரமில்லை



நீண்டுகிடக்கும் நெடுஞ்சாலையில்
வேப்பமரம் விரித்த நிழற்பாயில்
துண்டு தலைக்கு வைத்துத்
துயில் கொள்ள இயலவில்லை
நீர்வழிப்படூஉம் புணைபோல் நானும்
நதிவழிப்பாட்டுக் கடலடையக்கூடவில்லை



ரயிலில் வரும் சில வியாபாரிகள்
எட்டுக்கட்டையில் இலக்கியம் பேசுகையில்
அபாயச்சங்கிலி பிடித்திழுக்கும்
ஆண்மையின்னும் கூடவில்லை



கடன்கேட்கப் போனவீட்டில்
உப்புக்கரிக்கும் உணவைத்
துப்பித் தொலைக்கத் துணிவில்லை



சிலரது மரணத்தை
தேசிய லாபமென்று
அறிக்கையிடத் திராணியில்லை



முதலமைச்சர் வேலைகோரி
முதலமைச்சருக்கே சொல்லச்சொல்லும்
மூடப்பரிந்துரை மூட்டைகளை
முகத்தில் விசிறியடிக்க முடியவில்லை



தேசியகீதம் இசைக்கும் நேரம்
பிளிறும்-கனைக்கும்-பேசும்-நகரும் பிராணிகளை
வண்டலூர் அனுப்ப வசதியில்லை



இனிப்பு-ஊறுகாய்-நெய்யெல்லாம்
மூக்கோடு முடிகின்றன
நாற்பது வயதானால் நாவுக்கு உரிமையில்லை



எண்ணெய்க்குளியலின் பிற்பகல் தூக்கத்தை
வைத்தியர் சட்டம் வழங்கவில்லை



எழுத மை வேண்டும்
வானத்தின் நீலத்தில்
சில குடங்கள் கேட்டேன்
மசியவில்லை



வான்குடைய வேண்டும்
சிட்டுக் குருவிகளின் சிறகுகளைக்
கடன் கேட்டேன்
தரமாட்டான் மனிதனென்று தரவில்லை



கற்றை மேகமாய்க் காடுகடக்க
ஒற்றைத் தேன்துளியாய்ப் பூவுள்உருள
நீண்ட கனவு... நிறைவேறவில்லை



குறைந்தபட்சம்
ஞாயிறு மட்டுமேனும்
எட்டுமணித் தூக்கம் இயலவில்லை

பழைய பெரியவரே
பாலகங்கா�ர திலக்!
சுதந்திரம் எனது பிறப்புரிமையென்பது
சும்மா.
                                            -கவிஞர் வைரமுத்து


Saturday 23 August 2014

நட்பு



"நட்பு என்பது

சூரியன் போல்

எல்லா நாளும்

பூரணமாய் இருக்கும்




நட்பு என்பது

கடல் அலை போல்

என்றும்

ஓயாமல் அலைந்து வரும்




நட்பு என்பது

அக்னி போல்

எல்லா மாசுகளையும்

அழித்து விடும்




நட்பு என்பது

தண்ணீர் போல்

எதில் ஊற்றினாலும்

ஓரே மட்டமாய் இருக்கும்




நட்பு என்பது

நிலம் போல்

எல்லாவற்றையும் பொறுமையாய்

தாங்கிக் கொள்ளும்




நட்பு என்பது

காற்றைப் போல்

எல்லா இடத்திலும்

நிறைந்து இருக்கும்.

                                -கவிஞர் வைரமுத்து

Saturday 26 July 2014

தேன்துளிகள்...



மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!


கணவன்: என்ன?

மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???

கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!

மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….

கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..
(மறுநாள் இரவு)

கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண?

மனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிடேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு???

கணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…

மனைவி: ம்ம்… எப்படி டா!!!

கணவன்: அட முட்டாள், உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அணைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன் உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…
நல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை, இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…

மனைவி: நரகமா???

கணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு…), உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய், எனக்கு என் உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட மாதிரி இருந்தது…. இப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி?????

(வெட்கத்தில் இன்னும்சில தேன்துளிகளை சிந்தியது, வண்ணத்து பூச்சி...)

Friday 11 July 2014

"ஆதாம் ஏவாள்(கள்)" - படித்ததில் பிடித்தது

சென்னை மெரினா பீச் எங்கும்           
ஆதாம் - ஏவாள்கள்
ஆதாம் - ஏவாள்கள்


நம் கேமரா சுழல ஆரம்பிக்கிறது.
மாலை 6.30
இருவர் இருவராய் வருகிறார்கள்.
மாலை 7.30
ஒருவர் ஒருவராய் இருக்கிறார்கள்.

ஒரு சிற்றின்பப் பூங்காவாய்
மெரினா !

அதோ, கேமரா கூர்கிறது
அந்த ஹார்பர் பகுதியின் பழைய கூவத்தை தடுத்து நிற்கும்
இரும்பு மதகுகள்

மீசை வளராத ஒரு பையனும்
வளராத ஒரு பெண்ணும்
அங்கே போகிறார்கள்.

போய் என்ன?
இன்னொரு தாஜ்மஹாலுக்கா
அஸ்திவாரம் தோண்டப் போகிறார்கள்?

சில லுங்கி மனிதர்களுக்கு
அதை வேடிக்கை பார்ப்பது
வாடிக்கை.


கேமராவைத் திருப்பினால்
அதோ, ஒரு கட்டுமரம் !
மீனவர்களின் கர்ப்பக்கிரகம் !
கர்ப்பக்கிரகத்தில் கிடக்கிறது
கர்ப்பத் தடை மாத்திரைகள் !

அதோ, லைட் ஹவுஸ்
ஆதாம் - ஏவாள்களுக்கு
லைட் ஹவுஸ் பிடிக்காது
இருட்டு இருட்டாய் இருக்கும்
கெஸ்ட் ஹவுஸ் பிடிக்கும் ?
அவர்களுக்கு
ஒளி ஒளியாய் இருக்கும்
லைட் ஹவுஸ் பிடிக்குமா ?

இதோ, இங்கே அண்ணா சமாதி
எம்.ஜி.ஆர் சமாதி
எதையும் தாங்கும் இதயங்கள்
இதையும் தாங்குகின்றன.

சுற்றுலா பயணிகள் நனைகிறார்கள்.
சுற்றுலா வரும் பெண்கள் கவனிக்க:
(முழங்கால் வரை புடவை தூக்கி
கடலில் இறங்காதீர்கள்.
பலபேர் கண்களோடு பிறப்பதே
இதற்காகத்தான்.)

அதோ ! நம் கேமரா
சுண்டல்காரப் பையனிடம்
பேட்டி எடுக்கிறது.

"கட்டுமரத்தாண்ட என்ன பார்த்தே ?"
சிரிக்கிறான்.
"அங்கே ஓர் அண்ணன்
குழந்தையாயிட்டாரு !"

காற்று வாங்குவதற்காக
கடற்கரை பக்கம் வந்த
ஷாஜகான் - மும்தாஜ் ஆவிகள்
இவற்றைப் பார்த்துக் கடலில் விழுந்து
இரண்டாம் முறை இறந்ததாகக் கேள்வி !

மாநகராட்சி சோடியம்
விளக்குகளால்
மாநாடே போட்டிருக்கிறது !
ஆதாம் - ஏவாள் எதற்கும்
கலங்குவதில்லை
அவசர ம்கசூல்தான்
அவர்களுக்கு முக்கியம்.

அலைகள் விளையாடி
ஆனந்தம் நிறைந்த
மெரினா கடற்கரையா ?
காம விளையாட்டுச்
சிற்பங்கள் நிறைந்த
கஜுராஹோ கோயிலா ?

' காதாலாகி... கசிந்துருகி...
கண்ணீர் மல்கி'
என்று எழுதியவன்
எழுதிய விரல்களை
வெட்டிக் கொள்வான்.
.
அதோ நம் கேமராவை
ஜீம் செய்கிறோம் !
ஒரு இரண்டு சக்கர
வாகன மறைவு
பள்ளிக்கூடச் சீருடைதான்
அவர்களுக்கு
ஒரு பெற்றோரின் கனவு
மாளிகைக்கு
மனித வெடிகுண்டாய்
மாறிக் கொண்டிருக்கிறார்கள் !
அவனும் - அவளம்.

எங்கே போகிறது இந்தியா ?
இந்தியர்கள்
அமெரிக்காவுக்கு போகலாம்.
இந்தியக் கலாச்சாரம்
அமெரிக்காவுக்குத் தாவுகிறதா ?
.
அதோ !
ஆள் நடமாட்டமில்லாத அந்தப் பகுதி
ஆதாம் அவளை
'தேவதை' என்கிறான்
ஏவாள் அவனை
'தேவன்' என்கிறாள்
கடைசியில் இருவருமே சாத்தான்கள் !

பாரதி இதைப் பார்த்திருந்தால்
தலைப்பாகையை கழற்றிவிட்டு
தண்டவாளத்தில் படுத்திருப்பான் !

கோவா கடற்கரை
அலைகளில் இருக்கும் கேவலம்
மெரினா கடற்கரை
அலைகளிலும் கலக்கிறதா ?

காதலர் என்ற் பெயரில்
இந்த சதைப் பிராணிகள் சிலது
தற்கொலை செய்து கொள்கின்றன.
மரணம் இவர்களால்
அசிங்கப்பட்டுப் போகிறது.

நம் கேமராவையே நம்மால்
நம்பமுடியவில்லை.
இரண்டு ஆதாம் ஓர் ஏவாள்
ஓர் ஆதாம் இரண்டு ஏவாள்

ஒன்று தெரியுமா ?
கவிஞர்கள் யாருமே இப்போது
கடற்கரைக்குப் போய்
கவிதை எழுதுவதில்லை.
கடற்கரைக்குப் போனால்
கவிதை எங்கே வருகிறது ?
காமம் தான் வருகிறது.

ஆப்பிள் கடித்தால்
அந்த ஆதாமுக்கும் ஏவாளுக்கும்
மானமும், நாணமும் வந்ததாம் !
அந்த ஆப்பிள் எங்கே கிடைக்கும்
ஒரு லாரி ஆப்பிள்
அனுப்ப முடியுமா ?
இங்கே மானமும் நாணமும்
நிறைய வேண்டியிருக்கிறது !

இவ்வளவு நேரம்
இந்த நீல இனங்களை
'ஆதாம் ஏவாள்'
என்ற பெயர்களால் குறித்தேன்.

அந்த ஆதாம் - ஏவாள்
என்னை மன்னிப்பார்களா?


  -விஞர்  பா.விஜய்